‘சிவாஜி கணேசன்’ என்ற தலைப்பில் முனைவர் கா.வெ.சே. மருதுமோகன் எழுதிய இந்நூல்,அவரது வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல… ஒரு 50 ஆண்டுகால தமிழ்த் திரையுலகின் வரலாறு.சிவாஜி கணேசன் பற்றிய ஒரு வரலாற்று ஆவணமாக இப்புத்தகத்தைஎழுதியமுனைவர்மருதுமோகனைஎவ்வளவுபாராட்டினாலும்தகும்.பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரைஅவரது வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் ஒன்றுவிடாமல் ஆவணப்படுத்திய முறை போற்றுதலுக்குரியது.
ஏவி.எம்.சரவணன்
திரு. சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி நிறைய பேர் நிறைய நூல்கள், தகவல்கள் எழுதியிருந்தாலும்,முனைவர் மருதுமோகனின் ‘சிவாஜி கணேசன்
என்ற இந்த ஆய்வு நூலின் தகவல்கள் மிக விரிவானவை. வருங்காலத்தில் நடிகர்களும்.இளைஞர்களும், யுவதிகளும் அவரைப் பற்றி
அறிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்த இந்த நூல் ஒரு பொக்கிஷம்.
நடிகர் ரஜினிகாந்த்
‘சிவாஜி கணேசன்’ என்னும் இந்நால் பல்கலைக்கழகங்களின் கமிட்டிகள் செய்ய
வேண்டியது. ஆனால் ஒரு தனி நபர் செய்திருக்கும் காரியம்… பெரிய வேலையை எடுத்திருக்கிறோம். என்கிற மலைப்புக்கு ஆளாகிவிடாமல், எடுத்ததைச்
சிறப்பாக முடித்திருக்கும் முனைவர் மருதுமோகளை தழுவிப் பாராட்டுகிறேன்.நடிகர் கமல்ஹாசன்
Sivaji Ganesan (3 Parts) by Dr. K. V. S. Marudu Mohan
Estimated delivery 2-3 weeks