top of page

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நெடுங்கதையை வாசிக்காதவர்கள் மிகக் குறைவே. இதை அச்சு வடிவிலிருந்து வெவ்வேறு வடிவங்களுக்குப் பலர் கொண்டு சென்றிருக்கிறார்கள். இன்னும் சிலர் நவீன வடிவங்களில் இதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

என்றென்றைக்கும் ஏதாவது ஒரு வடிவில் இந்தப் பொக்கிஷம் நிலைத்து நிற்கும் என்பதே இதன் சிறப்பு. சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், இதனை 2440 பக்க புத்தகமாக, உயர்தரப் பதிப்பாகக் கொண்டு வந்திருக்கிறது. அதில் 1220 க்கும் மேற்பட்டவை மனம் கவரும் வண்ணப் பக்கங்கள். இவையெல்லாம் சேர்ந்து படித்தவர்களை மீண்டும் மீண்டும் படிப்பதற்குத் தூண்டும். புதுப்புது வாசகர்களைத் தன்பால் நிச்சயம் ஈர்க்கும்.

 

ஓவிய ஜாம்பவான்களான மணியம், வினு இவர்களின் கைவண்ணத்தில் மிளிர்ந்த கல்கியின் மகோன்னதப் படைப்பான பொன்னியின் செல்வன் - இப்போது ஓவிய மாமேதை சில்பியின் ஒரே சீடரான தூரிகைச் சித்தர் பத்மவாசன் மாபெரும் தவமாக நினைத்து தவநிலையில் நின்று செதுக்கிய - கீழே வைக்கவே மனம் வராத வகையில் தீட்டிய ஆயிரக்கணக்கான உயிரோட்டமான வண்ணச் சித்திரங்களுடனும், கோட்டோவியங்களுடனும் நேர்த்தியான வடிவமைப்பில், தரமான தயாரிப்பில் உங்கள் கைகளில். உங்கள் புத்தக அலமாரியில் நிச்சயம் இடம்பெற வேண்டிய பெருமைக்குரிய பதிப்பு.

Ponniyin Selvan (Colourful Illustrations) by Kalki Krishnamurthy

RM450.00Price
  • Estimated delivery 2-3 weeks

Follow Us

  • Facebook
  • Instagram
  • Threads
  • TikTok

Sign up for our newsletter

© 2025 by The Book Box.

bottom of page